டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவான சிக்சர் விளாசும் போட்டியில் டோனி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார்.

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று நடக்கிறது. இந்த தொடரின் தொடக்க விழாவாக சிக்சர் விளாசும் போட்டி நடத்தப்பட்டது. இதில் டோனி, மோகித் ஷர்மா, பத்ரிநாத், பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், தமிழ்நாடு பேட்ஸ்மேன் அனிருத் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டர்.

மெஷின் மூலம் வீசப்படும் பந்தை சிக்சருக்கு விளாசுவதுதான் இந்த சிக்ஸ் விளாசும் போட்டி. முதல் நபராக ஹெய்டன் சிக்ஸ் அடிக்க களம் இறங்கினார். அவர் முதல் பந்தை தவிர மற்ற இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார்.

அடுத்து வந்த நெஹி சிக்ஸ் அடிக்கவில்லை. அனிருத் ஸ்ரீகாந்திற்கு சரியாக பந்துகள் அமையவில்லை. அதன்பிறகு மெஷினில் டோனி பந்தை வைத்தார். இதில் மூன்று சிக்ஸ் விளாசினார்.

இறுதியாக டோனி களம் இறங்கினார். டோனி தான் சந்தித்த மூன்று பந்துகளையும் அதிக தூரத்திற்கு சிக்சர்களாக விளாசி அசத்தினார்.

போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தில் கூடியிருந்த சி.எஸ்.கே. ரசிகர்களை உற்சாகப்படுத்தி ஜெர்ஸி வழங்கினார்.
மல்லாகத்தில் நேற்று பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

6 பேர் கொண்ட குழு ஒன்றினால் மல்லாகத்தில் வைத்து கடத்தப்பட்ட 18 வயதான பாடசாலை மாணவி, பின்னர் வரணி பகுதியில் கடத்தப்பட்ட வாகனத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த மாணவியை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் நோக்கில் கடத்தப்பட்டதாகவும், இதற்காக குறித்த மாணவிக்கு போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தை வழங்க முயற்சித்த போதும், அவர் அதனை தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கடத்தல்காரர்களை எதிர்த்து குறித்த மாணவி நீண்டநேரம் போராடிய நிலையில், வரணி பகுதியில் வைத்து வாகனத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார்.

கடத்தல்காரர்கள் யாரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

குறித்த மாணவி சிறு காயங்களுக்கு ஆளான போதும், குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எவையும் நேரவில்லை என்று காவற்துறையினரும், வைத்தியத் தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


கழிவுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை கைது செய்ய முடியும் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி மூலம் பொதுமக்கள் துன்பங்களை எதிர்கொள்வர் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவிதித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த வர்த்தமானி அறிவித்தலால் தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வரதமணியை வாபஸ் பெறவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மத்திய மாகாணத்துக்கான பதில் ஆளுநராக ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் நிலூக ஏக்கநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ளமையால் பதில் ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் நிலூக ஏக்கநாயக்க எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தனது கட்டார் விஜயத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வடவல, ரொசல்லாவை வனப்பகுதியில் இன்று (21) மாலை ஏற்பட்ட தீயினால், அவ்வனப் பகுதியின் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சில விசமிகளின் நடவடிக்கையே இந்த தீபரவக் காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.


நாட்டிலுள்ள 06 பேரில் ஒருவருக்கு நாட்பட்ட நோய்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் மூட்டுவலி ஆகிய நாட்பட்ட நோய்கள் காணப்படுவதாக குடிசனக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் விசேட நிபுணர் சந்திராணி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் உள்ளவர்களிடத்தில் இந்த நாட்பட்ட நோய் அதிக தாக்கம் செலுத்துவதாகவும், ஆண்களை விட பெண்களிடத்திலேயே இந்த நாட்பட்ட நோய் அதிகம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த கல்வித் தரம் உள்ளவர்களிடத்தில் இந்த நாட்பட்ட நோய் ஏற்படும் வீதம் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு டவுன் ஹால் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோவினால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” மொபிடல் நிறுவனத்தின் பூர்ண அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எந்த நேரமும், எந்தவிதமான உபகரணங்களையும் பாவித்து இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய Internet of Things எனும் எண்ணக்கருவுக்கு அமைய இது அமைக்கப்பெற்றுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதி, ATM வசதி, குடிநீர் போத்தல்கள் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளிட்ட மேலும் பல வசதிகளுடன் இந்த நவீன பேரூந்து நிலையம் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இது சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் ஆகக்கூடிய உயர்வான விருது என்பது குறிப்பிடத்தக்கது.


கொழும்பு நகரில் குவியும் குப்பைகளில், 50 வீதமானவை சிற்றூண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் என்பவற்றிலிருந்து வெளியேற்றப்படுபவை என சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இவை தமது தவறான நடவடிக்கையினால் நிகழ்பவையல்லவெனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாயின் சிற்றூண்டிச் சாலைகளில் வெளியேறும் கழிவுகளை நூற்றுக்கு 20 வீதத்தால் குறைக்க முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்பான் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய, இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலநடுக்கம், மண்சரிவு, வாயு தொடர்பான விசேட நிபுணத்துவமிக்க 12 உறுப்பினர்கள் கொண்ட விசேட குழுவினர் மீதொட்டமுல்ல குப்பை மேட்டை நேற்று கண்காணித்தனர்.

அவர்களின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த பகுதியை 5 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கண்காணித்ததின் பின்னர், அவர்களின் முதற்கட்ட தீர்மானங்களை பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்தனர்.

மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.நுகேரா தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜப்பான் குழுவினரின் முதற்கட்ட கண்காணிப்பிற்கு அமைய, பிரதேசத்தில் மீத்தேன் வாயு 16 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், தீயைப் பற்றவைக்கக்கூடிய பொருட்களின் பாவனையை தவிர்க்குமாறும் இக்குழுவினர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

மீத்தேன் வாயு காற்றுடன் கலந்துள்ளமையால் குப்பைமேட்டின் கீழ் பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இக்குழுவினர் தெளிவூட்டவுள்ளனர்.

மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததன் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் முழுமையாக சேதமடைந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வீடுகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த 30 குடும்பங்களுக்கு இன்று வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த வீடுகளுக்காக அரசாங்கம் 3920 இலட்சம் ரூபவை செலவிட்டுள்ளது.

மேலும் இந்த வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுத் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு தலா இரண்டரை இலட்ச ரூபா வீதம் நிதி வழங்கப்பட்டது.

இழந்த விடுகளுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் செய்து முடிக்கப்பட்டதன் பின்னர் பெறுமதி கூடிய வீடுகளுக்கு மேலதிக தொகையைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில்பிரேமஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக, வஜிர அபேவர்தன, ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, துனேஷ் கன்கந்த, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.